ஆன்லைனில் புத்தகம் வாங்க

Wednesday 25 December 2013

போட்டிச் சிறுகதை-41

சிறுகதை-பனி விழும் காடு


அப்பாடா ... ஒரு வேலைய சரியா திறமையா செஞ்சு முடிச்சா, எவ்வளோ சந்தோஷமா இருக்கு மனசுக்கு. ஆஃபீஸில எல்லாரோட  பாராட்டையும் வாங்கிட்டோம். அநேகமா கூடிய சீக்கிரத்துல நம்மள சீனியர் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக்கிடுவாங்களோ...ஆக்கணும்..எவ்வளோ உழச்சிருக்கோம். அட, இன்னைக்கு இவ்வளவு தூரம் ஆஃபீஸில இருந்து நடந்து வந்துட்டோம், ஆனா களைப்பே தெரிலையே. சரி அந்த கடைல பூ வாங்கிட்டு போலாம். அம்பாளுக்கு நாளைக்கு ஸ்பெஷல் பூஜ பண்ணிட வேண்டியது தான். என்ன தான் இந்த பூ எல்லாம் அழகா இருந்தாலும், நம்ம ஊரு சாமந்தி பூ மாதிரி வராது. பக்கத்து வீட்ல இருந்த தாத்தா எங்க போனாரு? நமக்கு தினமும் குட் ஈவினிங் சொல்லுவாரே. சாவிய எங்க வெச்சேன். இந்த லைட்ட போடாமலே போயிட்டேனா. அச்சச்சோ.. ரெண்டு நாள் வீட்ட கூட்டலனா இவ்வளோ அசிங்கமா இருக்கே. டீ போட்டு குடிச்சிட்டு மொதல்ல இந்த வேலைய முடிக்கணும். வேண்டாம், மொதல்ல அம்மாக்கு ஃபோன் செஞ்சு நம்ம சந்தோஷத்த சொல்லிடுவோம், அப்ப தான் திருப்தியா இருக்கும்.
“ஹலோ அம்மா...”
“விநையா...சொல்லு மா... எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் மா. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க”
“நல்லா இருக்கோம் டா. வீட்டுக்கு வந்தாச்சா? வீக்கென்ட் என்ன பிளான்”
“எதுவும் இல்ல மா. இந்த வீக் நெறைய வேல. அதான் ரெண்டு நாளும் ரெஸ்ட் எடுக்க போறேன். அப்புறம் இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?”
“தோ வரேன்... விநையா... அண்ணி கூப்பிடுறா... குழந்தை அழறா போல இருக்கு. அரை மணி நேரம் கழிச்சி கூப்பிடுறியா?”
“ஓக்கே மா... பாய்”
ச்ச.. அம்மா கிட்ட சொல்லலாம் னு பாத்தா.. இவ்வளோ பிஸியா இருக்காங்களே. சரி... கீர்த்திக்கு ஃபோன் பண்ணி சொல்லுவோம்.
“ஹலோ... விநி... வாட் அ சர்பரைஸ்... எப்படி இருக்க”
“ஐ அம் ஃபைன் கீர்த்தி. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“ஆல் ஆர் குட். அப்புறம் அங்க க்ளைமேட் எப்படி இருக்கு. இங்க ரைணி சீசன் நாளும் ஒரே ஹாட் தான்”
“வெதர் இன்னைக்கு நல்லா இருக்கு”
“ஹே.. லிசன்... தேவ் கூப்பிடுறாரு ... டோன்ட் மிஸ்டேக் மி. நான் திரும்ப கூப்பிடுறேன்”
“நோ ப்ரோப்ளம் கீர்த்தி ... நம்ம அப்புறம் பேசலாம்”
சரி.. ஆகுற வேலைய பாப்போம் ... மொதல்ல கூட்டிட்டு, அப்புறம் நாளைக்குக்கு சேர்த்து சமச்சிட வேண்டியது தான். ம்ம்ம்..நம்மகிட்ட வெட்டியா கடலை போடுவானே ஸ்ரீகாந்த் , அவன்கிட்ட சொல்லலாமா ??
“ஹாய் ஸ்ரீ ...”
“ஹாய் விநையா... என்ன திடீர்னு”
“இல்லடா... நீ தான் ஆன்லைன் ல மெசேஜ் போட்டுட்டே இருந்தியே..ஒரு வரமா கொஞ்சம் பிஸி. அப்போ பேச முடில.அதான் உங்கிட்ட பேசலாம் னு . ரொம்ப நாள் ஆச்சே பேசி..”
“ஒ... நான் வெளில கிளம்புறேன்... நானே கூப்பிடட்டுமா?”
“சரி டா பாய்.”
ச்ச... எனக்கெல்லாம் சந்தோஷமே வர கூடாதா? இன்னைக்கு எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோசமா இருந்தேன். ஆனா என் சந்தோஷத்த கேட்க, எனக்கூட சிரிக்க ஒருத்தருக்கு கூட நேரம் இல்ல. நான் எதுக்கு இப்புடி டே அண்ட் நைட்  உழைக்றேன்னு எனக்கே தெரில. எவ்வளவு நேரம் தான் நானும் டீவி புக்ஸ் னு படிப்பேன். வீகென்ட் ஆனா வெளில சுத்துறேன். ஆனா தணியா சுத்துறேன். நான் ரசிக்கறத ஷேர் பண்ணிக்க கூட ஆள் இல்ல.ஒரு போட்டோ எடுக்கணும்னாலும் ரோட் ல போற எவன் கிட்டயோ சொல்லி எடுக்க சொல்ல வேண்டியதா இருக்கு. யாருக்காக சமைக்றேன். சாப்பிட்டு பாத்து நல்லா இருக்கு னு சொல்ல கூட ஆள் இல்ல. நான் என்ன பண்றேன் னு எனக்கே தெரில.
ஒழுங்கா படிப்ப முடிச்ச உடனே வந்த வரனுக்கு ஓக்கே சொல்லி இருக்கலாம். வேலை செய்ய ஆசை னு சொல்லி தட்டி கழிச்சாச்சு. அட்லீஸ்ட் ஒரு வருஷத்துக்கு அப்புறம் வந்த வரனயாவது ஓக்கே சொல்லிருக்கலாம். சாப்ட்வேர் இன்ஜினியர் தான் வேணும்னு சொல்லியாச்சு. அந்த டாக்டர் வரணுக்காவது ஓக்கே சொல்லி இருக்கலாம். ஆறு வயசு வித்யாசம், ஜெனரேஷன் கேப் னு சொல்லிட்டோம். அந்த திருத்தணிகாரனுக்காவது ஓக்கே சொல்லி இருக்கலாம் , ஊரு பையன் எனக்கு செட் ஆக மாட்டான் னு சொல்லிட்டோம். நம்மளையும் ஒருத்தன் லவ் பண்ணினானே அவனோடயாவது இருந்திருக்கலாம். உங்க அம்மாவ பிடிக்கல , நமக்கு செட் ஆகாது னு சொல்லிட்டோம். மூணு வயசு சின்னவன லவ் பண்ணி டைம் வேஸ்ட் ஆச்சு. ஒரு வருஷம் கழிச்சு, இது தெரிஞ்சா என் சொந்தகாரங்க தப்பா பேசுவாங்க னு ஓடிட்டான். அப்போ எல்லாரும் இருந்தாங்க. விடிய விடிய பார்டி பண்ணினோம். அதான் வாழ்க்கைன்னு நெனச்சோம். இப்போ அவங்க எல்லாம் செட்டில் ஆகிட்டாங்க. அட ச்ச... பைத்தியமே புடிச்சிடும் போல இருக்கே... கடவுளே...
இப்போ யாரு ஃபோன் பண்றது.
ஹலோ... என்னம்மா ?
விநையா ... சொல்லு டா... ஏதோ சொல்ல வந்தியே...
எதுவும் இல்ல மா.. தூங்க போறேன்.
சரி டா... தூங்கு.. டையர்டா இருப்ப.அப்புறம்.... கிறிஸ்மஸ் லீவ் க்கு இந்தியா வர பிளான் பண்ணிருக்கல ... வரும்போது நம்ம ஹர்ஷி குட்டிக்கு நெறைய பொம்ம வாங்கிட்டு வா. அப்புறம் அவளுக்கு ஒரு தங்க ஒட்டியாணம் வாங்கலாமா? பட்டு பாவாட சட்ட போடுறப்ப நல்லா இருக்கும். அத்தை வாங்கி கொடுத்தது னு ஆசையா போட்டுப்பா.. அண்ணனும் அண்ணியும் சந்தோஷ படுவாங்க. இங்க ஜி.ஆர்.டி ல வாங்கிக்கலாம். சரியா மா...
சரி மா. நான் நாளைக்கு பேசறேன்.
ஹலோ விநையா... விநையா...
ச்ச...
“விநையா ராதாகிருஷ்ணன் பீலிங் ஹாப்பி - ய குட் டே அட் ஆபீஸ் – 103 லைக்ஸ், 25 கமெண்ட்ஸ்.” (ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ்)
அட போங்கடா.... மனசு விட்டு பேச ஒரு ஆள் இல்லாத போது. உங்க லைக்ஸ் வெச்சு நான் என்ன பண்றது. வயசு இருக்குற வரைக்கும் நம்ம வேண்டாம் னு சொன்னோம்... வயசு போன அப்புறம் நம்மள வேனாங்குரானுங்க. நாப்பது வயசுல இப்படி தணியா பொலம்புரோமே.
கூகிள் : ஹொவ் டு கில் லோன்லிநெஸ்

வசதியான வாழ்கை. சுத்தமான ஊர். குளு குளு னு பணி. ஆனாலும் சொந்தம் னு யாரும் இல்ல. நரகம் இல்ல இது. காடு. பனி விழும் காடு.